Site icon Tamil News

பைபர்ஜாய் வரும் 170000 பேர் இடம்பெயர்வு

இந்தியா மற்றும் பாகிஸ்தானை நோக்கி வீசும் பைபர்ஜாய் புயல் காரணமாக இரு நாடுகளிலும் உள்ள 170,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கூட இந்தியாவின் வடமேற்கு கடலோர பகுதிகளிலும், பாகிஸ்தானின் தெற்கு கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான புயலாக இது இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், ஏராளமான வீடுகள் மற்றும் பயிர்கள் சேதமடையலாம் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்புப் படையினரும், கடலோரக் காவல்படையினரும் மீட்புப் பணிகளுக்காக கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

வங்காள மொழியில் “பைபர்ஜாய்” என்றால் “பேரழிவு” என்று பொருள்.

Exit mobile version