Site icon Tamil News

அட்லாண்டிக் பெருங்கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட புலம்பெயர்ந்தவர்கள் மீட்பு!

ஸ்பெயினின் கடல்சார் மீட்பு நிறுவனம் நேற்று (20.06) அன்று அட்லாண்டிக் பெருங்கடலில்  மரத்தாலான டிங்கி கப்பலில் ஆபத்தான முறையில் பயணித்த  68 புலம்பெயர்ந்தவர்களைக் காப்பாற்றியுள்ளதுடன், ஐந்து பேரின் சடலங்களையும் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கேனரிஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஏழு தீவுகளில் ஒன்றான டெனெரிஃப்பிற்கு தெற்கே 815 கிலோமீட்டர் (506 மைல்) தொலைவில் வடமேற்கு ஸ்பெயினில் இருந்து பிரேசிலுக்குப் பயணித்த எண்ணெய் டேங்கர் ஒன்று குறித்த மரப்படகை அவதானித்ததாக தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த படகிற்கு அருகில் சென்றவர்கள் புலம் பெயர்ந்தவர்களை மீட்டுள்ளதுடன், மூவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். இருவரின் சடலங்கள் மோசமான வானிலை காரணமாக கடலில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அட்லாண்டிக் பாதையில் புலம்பெயர்ந்தோரை உல்லாசக் கப்பல்கள் மீட்பது அசாதாரணமானது என கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலானது டெனெரிஃப்பில் உள்ள சாண்டா குரூஸ் துறைமுகத்திற்கு இன்று (21.06) வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version