Site icon Tamil News

பிரபல ஹீரோவுடன் காதல் திருமணம் செய்யப்போகும் மீனா? அவரே கொடுத்த பதில்

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை மீனா, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார்.

இவர் குறித்து இணையத்தில் பரவி வரும் கிசு கிசு வதந்திக்கு, தனது எக்ஸ் தள பக்கத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

மீனா கடந்த 2009ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். நைனிகாவும் தற்போது குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மீனாவின் கணவர் வித்யா சாகருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கணவரின் இறப்பிற்கு மிகு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை மீனா ஒரு சில படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார்.

அண்மையில் மீனா குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது. அதில் அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், பிரபல டாப் ஹீரோ ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவரையே இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் மீனா குறித்து கிசுகிசு பரவி வருகிறது.

இதுகுறித்து, தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ள மீனா, வதந்திகள் வெறுப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன, முட்டாள்களால் பரப்பப்படுகிறது. மற்றும் முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version