Tamil News

இந்த போஸ்டர்ல உங்க கண்ணுக்கு இது தெரியுதா? நல்லா பாருங்க….

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படமாக வெங்கட் பிரபு இயக்கும் கோட் படம் உள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யை அடுத்து மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, லைலா, சினேகா, அஜ்மல், பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் ரம்ஜான் ஸ்பெஷலாக கோட் படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

கோட் படத்தின் புதிய போஸ்டரில் 2000ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி என இரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு விமான விபத்து நடந்திருக்கிறது.

இப்படத்திலும் விஜய் விமானியாக நடித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளதால் இரண்டையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நிறைய பேசி வருகிறார்கள். ஆனால் சிலருக்கு அப்படி குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் உள்ளது.

அப்படி குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதையெல்லாம் படம் வந்தால் பார்ப்போம்.

Exit mobile version