Site icon Tamil News

இலங்கையில் பண்டிகை காலத்திற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்கு தேவையான அரிசியை வழங்குவதற்காக அரிசி கையிருப்பு ஒன்றை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாரிய ஆலை உரிமையாளர்கள் அதனை சந்தைக்கு விடாமல் மறைத்து வைத்திருப்பதால் தற்போது சந்தையில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பண்டிகைக் காலங்களில் அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் வகையில் ஆலை உரிமையாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் திருவிழாவின் போது சதொச நுகர்வோருக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version