Tamil News

பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய உணவால் மக்களை ஈர்த்த ஈழத் தமிழர் – யார் இந்த பிரின் பிரதாபன்?

பிரித்தானியாவில் இடம்பெற்ற சமையல் போட்டியொன்றில் தமிழர் பாரம்பரிய உணவால் வெற்றிவாகை சூடிய ஈழத் தமிழர் தொடர்பில் உலக நாடுகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணருமான பிரின் பிரதாபன், பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியின் “Masterchef 2024” சமையல் போட்டில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றுள்ளார்.

பிபிசி தொலைக்காட்சியின் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சமையல் போட்டியின், 20ஆவது தொடர் முடிவில் பிரின் பிரதாபன் குறித்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த போட்டியின் நடுவர்களான ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோரால் Masterchef 2024 என்ற பட்டம் பிரினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

8 வாரங்களாக நடைபெற்ற குறித்த போட்டியில் 57 சமையல் போட்டியாளர்களைக் கடந்து பிரின் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் தெரிவித்துள்ளார்.

தமது சமையல் பகுதிகள் “இலங்கையின் தமிழப் பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும்“ என்றும் பிரின் பிரதாபன் குறிப்பிட்டுள்ளார்.

நான் இன்று சமையல் கலைஞனாக இருப்பதற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணம், என்று அவர் கூறினார்.

யார் இந்த பிரின் பிரதாபன்?

நாட்டின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது பிரின்னின் தமிழ் பெற்றோர்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.

இலங்கை பாதுகாப்பான இடமாக இல்லாததால் அவரது பெற்றோர் இங்கிலாந்திற்கு வந்தனர். போரினால் குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்தார்.

28 வயதான பிரின் ஒரு கால்நடை மருத்துவர் ஆவார், அவர் தனது வருங்கால மனைவியான என்னாவுடன் வசிக்கிறார். அவர் இல்போர்டில் பிறந்தார், எசெக்ஸின் செல்ம்ஸ்போர்டில் வளர்ந்தார், இப்போது பிரிஸ்டலில் வசிக்கிறார்.

சிறு வயது முதலே சமையல் நிகிழ்ச்சி பார்ப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். வருங்கால மனைவி மற்றும் தாயாரின் சமையல் அனுவத்தை கொண்டு அவர் வளர்ந்துள்ளார்.

சமையல் ஆர்வம்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோரே, உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக பிரின் குறிப்பிட்டுள்ளார்.

அற்புதமான காரமான சமையல் பின்னணியை தாம், தமது பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது சமையல் பகுதிகள் உண்மையிலேயே இலங்கையின் தமிழ் இலங்கை பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று பிரின் குறிப்பிட்டுள்ளார்.

மற்றும் கிழக்கு ஆசியாவில் இருந்து நான் விரும்பி உண்ணும் மற்றும் மீண்டும் உருவாக்கும் உணவின் தாக்கமும் அடங்கும்.

Exit mobile version