Site icon Tamil News

iphone 15 இல் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்கள் – அதிருப்தியில் பயனர்கள்

சமீபத்தில் வெளியான iphone 15 சீரியஸ் மாடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த பதிவில் அந்த மாடலில் ஏற்பட்டுள்ள முக்கியமான மூன்று பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.

முதல் பிரச்சனையாக ஐபோன் 15ல் Setup Bug இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் ஏற்கனவே ஒரு ஐபோன் மாடல் பயன்படுத்திக் கொண்டிருந்தால், அதில் உள்ள தரவுகளை நேரடியாக ஐபோன் 15க்கு மாற்றும்போது, சாதனம் அப்படியே பிரீஸ் ஆகிவிடும் சிக்கலை சந்திக்கிறது. அதாவது கொஞ்ச நேரத்திற்கு சாதனம் வேலை செய்யாமல் நின்று விடுகிறது. இதை சரி செய்வதற்கு தற்போது ஆப்பிள் நிறுவனம் சிறிய ஓஎஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் சாதனம் சரியாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று அதன் சமீபத்திய சாஃப்ட்வேர் அப்டேட் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது பிரச்சனை ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு தொடர்புடையதாகும். இந்த சாதனங்களில் நமது கைரேகை கரை அப்படியே படிந்து விடுகிறது என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து, பயனர்களின் தோலில் இருந்து வரும் எண்ணெய் போன்ற திரவத்தால் தற்காலிகமாக அவற்றின் நிறம் மாறலாம். அதை சுத்தம் செய்ய மென்மையான அல்லது ஈரமான துணையைப் பயன்படுத்தினால் போய்விடும். உடனடியாக உங்கள் சாதனத்திற்கு ஒரு ப்ரொடெக்ட்டிவ் கேஸ் போட்டுக் கொள்வது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது பிரச்சனை ஐபோன் 15ன் தரம் சார்ந்தது. அதாவது ஐபோன் 15 மாடலின் தரம் நன்றாக இல்லை என்பதுதான் இந்தக் குற்றமாகும். டிஸ்ப்ளே சரியாக பொருத்தப்படாமலும், கேமரா லென்ஸின் உள்ளே தூசி மற்றும் சேதத்தின் அறிகுறிகள் தென்பட்டும், சாதாரணமாக கீழே விழுந்தாலே டென்ட் ஏற்படும் வகையிலும் இருப்பதாக பல குறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு நிறுவனம் தரப்பிலிருந்து எவ்வித பதில்களும் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் ஐபோன் பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Exit mobile version