Site icon Tamil News

கனடாவில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து – வரலாற்று சிறப்பு மிக்க தேவாலயம் முற்றிலும் அழிவு

வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு டொரான்டோ தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஏற்பட்ட தீயினால் St. Anne’s Anglican தேவாலயம் முற்றிலுமாக தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் தேவாலய கட்டிடம் முழுவதும் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும, தீ விபத்தின் போது தேவாலயத்தினுள் எவரும் இருக்கவில்லை என அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்திற்கு காரணம் குறித்து ஊகிக்க முடியாது என டொரான்டோ துணை தீயணைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த தேவாலயம் 1907 – 1908 காலப்பகுதியில் கட்டப்பட்டது.  1996 இல் டொரான்டோ நகரம் இந்த தேவாலயத்தை ஒரு பாரம்பரிய தளமாக அறிவித்தது.

அந்த ஆண்டு கனடாவின் தேசிய வரலாற்று தளமாகவும் இந்த தேவாலயம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version