Site icon Tamil News

வேட்டையனின் மனசிலாயோ பாடல் ரிலீஸ் திகதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்டையன் படத்தின் முதல் பாடல் மனசிலாயோ வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த பாடல் வெளியாகும் என குறிப்புட்டுள்ளனர்.

Exit mobile version