Site icon Tamil News

மலேசியாவின் ”பேய் நகரம்” : அழகிய கட்டடத்தின் பின்னணியில் உள்ள சோகம்!

மலேசியாவில் சீனர்களால் உருவாக்கப்பட்ட ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்கள் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், பேய் நகரங்கள் போல் காட்சியளிக்கிறது.

உண்மையில் குறித்த கட்டடங்கள் வெளிநாட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டது.

ஆனால் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், அதாவது கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 100  பில்லியன் டொலர்களை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை நீங்கள் இந்த கட்டடத்தை பார்க்கும்போது வானலாவிய உயர்ந்த கட்டடங்கள்போல் தோன்றாலாம். ஆனால் அங்கு சிறிது நேரம் இருந்தால் உங்கள் மனம் உங்களை அரியாமலேயே பீதி கொள்ளும்.

நீர் பூங்கா, கோல்ஃப் மைதானம், அலுவலகங்கள், பார்கள் மற்றும் உணவகங்களை உள்ளடக்கிய சூழல் நட்பு நகரத்தை உருவாக்குவதுதான் திட்டம். நகரத்தில் 1 மில்லியன் மக்கள் வாழ சீன டெவலப்பர்கள் திட்டமிட்டனர்.

ஆசியாவின் நிதி மையமான சிங்கப்பூருக்கு அடுத்த பகுதிக்கு முதலீட்டாளர்கள் பெரும் வாய்ப்புகளுக்காக குவிவார்கள் என்று டெவலப்பர்கள் நம்பினர். இருப்பினும் தற்போது இந்நகரம் கைவிடப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கான  விசா மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

உயரமான கட்டிடங்களில் சில நூறு பேர் மட்டுமே வசிக்கின்றார்கள். வியாபாரம் இன்மையால் நகரில் நிர்மாணிக்கப்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.  மேலும் திட்டத்தின் 15 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீன அரசாங்கம் தனது குடிமக்கள் வெளிநாடுகளில் 50,000 டாலர்களுக்கு மேல் செலவிடுவதைத் தடைசெய்யும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆகவே சீன மக்களுக்கும் இந்த வீடுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

அழகாக நிர்மாணிக்கப்பட்ட இந்த பிரமாண்ட நகரம் தற்போது பேய் நகரமாக வர்ணிக்கப்படுகிறது.

Exit mobile version