Site icon Tamil News

காசா மக்களுக்கு இஸ்ரேல் விதித்த கெடு

பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்றுஇஸ்ரேல் ராணுவம் கெடு விடுத்துள்ளது.

1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7-வது நாளாக நேற்று கடுமையான சண்டை நடந்தது. இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்கள் தயாராக உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருகின்றன.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

வடக்கு பகுதியில்தான் தரைவழியாக நுழைய இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

Exit mobile version