Site icon Tamil News

தென் சீனக் கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபடும் முக்கிய நாடுகள்!

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் இணைந்து நடத்தும் முதலாவது இராணுவப் பயிற்சி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரும் வருகை தந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இராணுவப் பயிற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதுடன், 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த இராணுவப் பயிற்சியை நடத்தியிருந்த நிலையில், தென்சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே தகராறு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version