Site icon Tamil News

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவுசெய்யப்பட்டுள்ள சொகுசு BMW கார் மீட்பு

ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான குஷ் மற்றும் கொக்கைன் ஆகியவற்றை விமான அஞ்சல் மூலம் இறக்குமதி செய்து கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபரின் சொகுசு வீட்டின் கேரேஜில் மாடல் அழகி பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட BMW சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருதானை பிரதேசத்தில் பிரதான வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய இந்த கோடீஸ்வர வர்த்தகர் சில காலமாக பொலிஸாருக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்ததாகவும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வெளியே வரும் போதே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருட முற்பகுதியில், சந்தேகநபர் நாவல – கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த போது, ​​போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

இச்சம்பவத்துடன் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாவல பாடசாலை மாவத்தைக்கு அருகில் உள்ள உயர் வீடொன்றிற்கு தனது வசிப்பிடத்தை மாற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Exit mobile version