Site icon Tamil News

நிலவில் ரயில் நிலையம் – நாசா அதிரடித் திட்டம்

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சியில் நாசா தற்போது இறங்கியுள்ளது. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலிலிருந்து சற்று மாறுபடுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைப்பது தான் நாசாவின் திட்டம். தானியங்கி முறையில் செயற்படும் வகையிலும், சுமைகளைக் கடத்திச் செல்லும் வகையிலும் இதன் இயக்கம் இருக்கவேண்டும் என நாசா விரும்புகிறது.

உலக நாடுகள் விண்வெளியில தங்களின் ஆதிக்கத்தை செலுத்துகின்ற வகையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் உள்ளடங்குகின்றன.

அண்மைய காலமாக உலக நாடுகளின் பார்வை நிலவின் மீது அதிகம் விழுந்துள்ளது. இச்சூழலில் தான் நாசா, ‘லூனார் ரயில்வே’ குறித்து பேசியுள்ளது. நிலவில் நீர் உள்ளதா, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தான் இது கவனத்துக்கு வந்துள்ளது.

அண்மையில் நாசாவின் என்ஐஏசி (NASA Innovative Tech Concepts) டெக் சார்ந்து ஆறு திட்டங்களை அறிமுகம் செய்தது. அதில் ஒன்றுதான் இந்த லூனார் ரயில்வே. ஃப்ளோட் (Flexible Levitation on a Track) என இந்த திட்டம் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் மேம்பட்ட போக்குவரத்து அமைப்பை உருவாக்க நாசா முயல்கிறது. நிலவில் ‘மூன் பேஸ்’ கட்டுமானம் மற்றும் அதன் இயக்கம் சார்ந்த பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இது அமையும் என நாசா நம்புகிறது.

Exit mobile version