Site icon Tamil News

பொசன் தினத்தில் நடத்தப்பட்ட மதுபான தன்சல் : டிக்டொக்கில் வீடியோ பதிவேற்றிய 6 இளைஞர்கள் கைது!

பொசன் பௌர்ணமி தினத்தன்று நடத்தப்பட்ட மதுபான தன்சல் குறித்த காட்சியை டிக்டொக் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையின் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணொலி டிக்டொக்கில் வைரலாக பரவியதை அடுத்து, இது சம்பந்தமான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர், கணினி குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த ஆறு பேரும் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன். 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த ஆறுபேரும் கணிணி குற்றப்புலானாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு நீண்ட வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மது பாட்டில்களில் தேநீர் ஊற்றியதாகவும், டிக்டோக்கில் வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்த செயலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Exit mobile version