Site icon Tamil News

வாகன இறக்குமதி செய்ய அமைச்சுகளுக்கு அமைச்சரவை அனுமதி: விதிக்கப்பட்டுள்ள வரையறை

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக கட்டுமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தவிர மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சுக்கள் நிதியமைச்சிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

Exit mobile version