Site icon Tamil News

பாடம் கற்றுக்கொள்ளலாம் – ரோஹித் ஷர்மா

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார்.

அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி நபரும் மிகவும் வித்தியாசமானவர்கள், மேலும் ஒவ்வொரு நபருடனும் அவர்கள் விளையாட விரும்பும் விதத்தில் விளையாட வைக்க முயற்சி செய்து வருகிறோம்.

அப்படி அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப விளையாட விட்டால் தான் நன்றாக விளையாடுவார்கள். ஒரு அணிக்கு கேப்டடானாக இருக்கிறோம் என்றால் அது எப்போதும் மகிழ்ச்சியான நாட்கள் அல்ல. ஏனென்றால், இது போன்ற போட்டிகளில் தோல்வி அடையும் நாட்களில் கேப்டன் எழுந்து நின்று அணியைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்கவேண்டும்.

தவறு நடந்ததில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். ஒரு போட்டியில் தோல்வி அடைந்துவிட்டோம் என்றால் அதனை நினைத்து கொண்டே இருக்க கூடாது. அந்த போட்டியில் நாம் என்ன தவறு செய்தோம் அதனை எப்படி திருத்திக்கொள்ளலாம் என்று பார்க்கவேண்டும்” எனவும் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார்.

Exit mobile version