Site icon Tamil News

2023 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்…!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(19) இடம்பெற்றது.

அஹமதாபாத் – நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 6ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

Exit mobile version