Tamil News

இலங்கையிலும் முன்பதிவு செய்வதில் சாதனை படைத்து வரும் லியோ

நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்படத்திற்கான முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

லியோ படத்துக்கான முன்பதிவு வெளிநாட்டில் கடந்த மாதமே தொடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. முன்பதிவு ஆரம்பமானதும் டிக்கெட்டுகள் சரசரவென விற்றுத்தீர்ந்து வருகின்றன.

இதனால் லியோ படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிய வண்ணம் உள்ளன.

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இலங்கையிலும் ரசிகர் கூட்டமே இருக்கின்றனர்.

முன்பதிவு மூலமே தற்போது மாஸான சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது லியோ திரைப்படம். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையிலும் வௌயிடப்படும் லியோ படத்திற்கான முன்பதிவுகளில் அனைத்து டிக்கட்டுக்களும் சரசரவென விற்றுத்தீர்ந்து வருகின்றன.

இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஒவ்வொரு திரையரங்குகளாக லியோ ப்ரீ புக்கிங்க செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் தற்போது மட்டும் 7 திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவுகள் புக் மை ஷோவில் உள்ளன.

அதிலும் பல திரையரங்குகளில் அனைத்து டிக்கட்டுக்களும் விற்றுத்தீர்ந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

 

Exit mobile version