Site icon Tamil News

உக்ரைன் மீதான இராணுவப் பேச்சுக்களில் கசிவு : ஜெர்மனி தீவிர விசாரணை

உக்ரைன் போர் குறித்த இரகசிய இராணுவப் பேச்சுக்களின் ‘மிகவும் தீவிரமான’ கசிவு குறித்து ரஷ்ய சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது தொடர்பில் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவின் அரச ஆதரவு ஆர்டி சேனலின் தலைவரான மார்கரிட்டா சிமோனியன் பெப்ரவரி 19 அன்று ஜேர்மன் இராணுவ அதிகாரிகள் எனக் கூறிய 38 நிமிட ஆடியோ பதிவை கிரிமியா மீதான சாத்தியமான தாக்குதல்கள் பற்றி விவாத ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளது.

பதிவில், ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாரஸ் ஏவுகணைகளை உக்ரேனியப் படைகளால் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் மற்றும் அவற்றின் சாத்தியமான தாக்கம் பற்றிய விவாதங்களைக் உள்ளடக்கியுள்ளது.

2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட ரஷ்ய நிலப்பரப்பை கிரிமியாவுடன் இணைக்கும் கெர்ச் ஜலசந்தியின் மீது ஒரு முக்கிய பாலம் போன்ற இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை குறிவைப்பது தொடர்பிலான தகவல்களும் அதில் அடங்கும்

மேலும் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கியேவுக்கு வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்துவதையும் விவாதங்கள் உள்ளடக்கியது.

இந்நிலையில்  வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா விவாதத்திற்கு ஜேர்மனி “உடனடியாக” விளக்கங்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Exit mobile version