Site icon Tamil News

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Laugfs Gas PLC தனது உள்நாட்டு எல்பி எரிவாயுவின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (ஏப். 01) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 4,115 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 218 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

மேலும் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version