Tamil News

“அனிமல்” படத்தை பார்த்து விட்டு குஷ்பு மகள்கள் கொடுத்த எச்சரிக்கை..

அனிமல் படத்தின் இந்திப் பதிப்பு இந்தியாவில் 500 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், முஸ்லீம் வெறுப்பு, ஹிட்லரின் நாஜிக் கொள்கைக்கு ஆதரவு என்று சமூகத்தின் எதிர்மறை அம்சங்கள் படத்தில் இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும், சந்தீப் ரெட்டி வாங்காவின் படம் வசூல் சாதனை படைத்தது.

அனிமல் படம் வெளியான போதே அதன் பாசிச கருத்துக்களுக்காக பலரது கண்டனங்களை பெற்றது. அதில் சொல்லப்பட்டிருப்பவை பாசிச கருத்துக்கள் என்பதை அறியாமல் படத்தை ரசித்தவர்களே அதிகம்.

அனிமலின் ஆபத்தை உணர்ந்த பலரும் படத்தைப் பார்க்காதீங்க என்று எச்சரித்தனர். நடிகை குஷ்புவையும் அவரது மகள்கள் அப்படி எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆணாதிக்கம் பெண்ணடிமைத்தனம் போன்றவை கொண்ட படத்தை எனது மகள்கள் பார்க்கக் கூடாது என்பதே எனது விருப்பம், ஆனால், அப்படி அந்தப் படத்தில் என்னத்தான் இருக்கிறது என்று அறிவதற்காக என்னுடைய மகள்கள் அனிமல் படத்தைப் பார்த்தனர் என்று சொன்ன குஷ்பு, அவர்கள் தன்னிடம், அந்தப் படத்தைப் பார்க்காதீங்க என்று எச்சரித்ததாகவும் கூறினார்.

அனிமல் படத்துக்காக இயக்குநரை குறை சொல்ல மாட்டேன், அவருக்கு வெற்றிதான் முக்கியம். அதுபோன்ற படங்களை பார்க்கும் மக்களின் மனநிலையை குறித்துதான் சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Exit mobile version