Tamil News

விஜய்க்கு இனி கட்டவுட் மற்றும் பால் அபிஷேகம் செய்ய மாட்டோம்…. ரசிகர்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

தளபதி விஜயின் திரைப்படங்கள் வெளியாகும் போது, கட்டவுட் மற்றும் லிட்டர் கணக்கில் பால் அபிஷேகம் செய்யும் வடசென்னை தளபதி விஜய் ரசிகர்கள், லியோ படத்தில் இருந்து அப்படி செய்ய மாட்டோம் என கூறி புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வழக்கமாக விஜய் திரைப்படம் வெளியிடும் போது ரசிகர்கள், விஜய்க்கு கட்டவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இனி நாங்கள் தளபதி நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்கள், குறிப்பாக லியோ திரைப்படம் வெளியாகும் போது கட்ட அவுட் மற்றும் பால் அபிஷேகம் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

அதற்குப் பதில் இனி ஏழை எளிய மக்களுக்கு, பயன் தரும் வகையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாணவ மாணவி செல்வங்களுக்கு பள்ளிக்கு தேவை கூடிய உபகரணங்கள் வழங்குவோம் என வடசென்னை விஜய் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இவர்களின் இந்த முடிவு… அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆரம்பத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளிக்காத நிலையில், பின்னர் அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்தது, இந்த தகவல் தளபதி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, ராயபுரத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அப்பகுதியை சேர்ந்த சுமார் 300 ஏழை எளியோருக்கு அரிசி, காய்கறிகள், தண்ணீர் குடம், பாய் தலையணை,டிபன்பாக்ஸ்கள் மற்றும் 100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் என வழங்கி கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக விஜய் ரசிகர்கள் தங்களை நோக்கி எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அதனை கண்டு கொள்ளாமல் விதவிதமாக கட்டவுட் வைப்பதையும், லிட்டர் கணக்கில் பால் அபிஷேகம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்த நிலையில், இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதே நேரம் தளபதி ரசிகர்களை செய்கைகளை பலர் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version