Site icon Tamil News

2024 ஆம் ஆண்டுக்கான கொள்கைகளை வகுத்த கிம் : அதிர்ச்சியில் உலக நாடுகள்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், அமெரிக்காவின் முன்னோடியில்லாத மோதல் நகர்வுகளை எதிர்கொள்வதற்காக போர் தயாரிப்புகளை விரைவுபடுத்துமாறு அதன் இராணுவம், வெடிமருந்துத் துறை மற்றும் அணு ஆயுதத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் ஆளும் கட்சியின் முக்கிய கூட்டத்தில் புத்தாண்டுக்கான கொள்கை வழிகாட்டுதல்கள் குறித்து பேசிய அவர் மேற்படி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பியோங்யாங் “ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திர” நாடுகளுடன் மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் கிம் ஜொங் உன் இதன்போது தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான போர்க்குணமிக்க பணிகளை முன்வைத்த கிம், ஆயுத தாயரிப்பு, அணுவாயுத தயாரிப்புகளை விரைவுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

வட கொரியா ரஷ்யாவுடன் உறவுகளை விரிவுபடுத்துகிறது, உக்ரைனுடனான அதன் போரில் பயன்படுத்துவதற்கு மாஸ்கோவிற்கு இராணுவ உபகரணங்களை பியோங்யாங் வழங்கியதாக வாஷிங்டன் குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் ரஷ்யா வடக்கின் இராணுவ திறன்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version