Tamil News

இணையத்தை உலுக்கும் ‘கங்குவா’ நடிகை திஷா பதானியின் புதிய ஸ்டண்ட் வீடியோ :

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல காலகட்டங்களை உள்ளடக்கிய கற்பனை அதிரடி சாகசத்தில் சூரியா ஆறு வேடங்களில் தோன்றியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்,

இப்போது நடிகை தனது சமூக ஊடகத்தில் ஒரு பயிற்சியாளருடன் அக்ரோபாட்டிக் ஸ்டண்ட் செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ கிளிப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது , இந்தப் படத்துக்கா அல்லது அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் நாக் அஸ்வின் இயக்கிய ‘கல்கி 2898 AD’ படத்திற்காகவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

 

Exit mobile version