Tamil News

“திமுக – காங் கூட்டணிக்கு வர வேண்டும்” நடிகர் விஜய் விருப்பம் தெரிவிப்பு

நடிகர் விஜய் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் தெரிவித்திருக்கிறார்.

234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் மூன்று மாணவ, மாணவிகளை விஜய் சமீபத்தில் சந்தித்தார். அவர்களுக்கு 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் சான்றிதழையும் வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இந்நிலையில் நடிகரும், எம்.பியுமான விஜய் வசந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“விஜய் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழகத்துக்கு புதிதல்ல. அதுபோல பல தலைவர்கள் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்திருக்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் செயல்பாடு குறித்து காலம் பதில் சொல்லும். இப்போதுதான் தன்னுடைய அரசியல் வருகை குறித்து நடிகர் விஜய் வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார். போகப் போக பார்க்கலாம்” என்றார்.

 

 

Exit mobile version