Tamil News

’கங்குவா’ டீசர் அப்டேட்… மகிழ்ச்சியின் உச்சத்தில் சூர்யா ரசிகர்கள்!

கங்குவா’ படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது. ’கங்குவா’ என்றால் நெருப்பின் கங்கு போல கோபமும், வீரமும் உடைய வீரன் என்று அர்த்தம் வரும் எனவும் படத்தின் தலைப்பை அறிவித்து படக்குழு தெரிவித்தது.

'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யா.

படத்தில் டைட்டில் கிளிம்ப்ஸ், முதல் லுக் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக, மணிக்கணக்கில் சூர்யா மேக்கப் போட்டதாகவும் சொல்லப்பட்டது.

படம் அடுத்த வருடம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் இதன் டீசர் அல்லது இரண்டாம் பார்வை பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version