Site icon Tamil News

கோவையில் மீண்டும் களம் இறங்கும் கமல்: பா.ஜ.க வேட்பாளர் யார்?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதே சமயம் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து செயல்பட துவங்கியுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் கோவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கோவையும் ஒன்றாக கருதி, வலுவான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வானதி சீனிவாசன் தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இருப்பினும் அவரை மீண்டும் களமிறக்க கட்சி மேலிடம் விரும்புவதாக கூறப்படுகிறது.

Exit mobile version