Tamil News

ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் நாளே இப்படியா? என்ன கொடும சார் இது…

புக் மை ஷோவில் முதல் நாளே ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களுக்கான டிக்கெட் புக்கிங் எந்தவொரு காட்சிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் கூட ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்தில் பரிதாபத்திற்குரிய நிலைமையில் உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளி நிலைமை இப்படி தான் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகி உள்ள இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

ஜப்பான் படத்திற்கு முதல் ஷோவில் இருந்தே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ஆளவிடுங்கடா சாமி என ரசிகர்கள் தெறித்து ஓடி வருகின்றனர். கார்த்தி நல்லா நடிச்சிருந்தாலும், ஜிப்ஸி படத்தைத் தொடர்ந்து ராஜு முருகன் இந்த படத்திலும் ஸ்க்ரிப்ட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே தெரிகிறது.

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் தான் குவிந்து வருகின்றன. படம் தீபாவளிக்கான சரவெடி படமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முதல் நாளிலேயே பெரியளவில் டிக்கெட் புக்கிங் நடைபெறாமல் உள்ள நிலையில், வசூல் ரொம்பவே அடிவாங்கும் என தெரிகிறது.

புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் இன்று மாலை 6 மணி, 10 மணி காட்சிகள் எல்லாமே பச்சை நிறமே பச்சை நிறமே எனக் காட்டி வரும் நிலையில், தீபாவளிக்கு இன்னும் மோசமாக டிக்கெட் புக்கிங் இருக்கும் என்றே கணிப்புகள் வெளியாகி உள்ளன.

விக்ரம் பிரபுவின் ரெய்டு படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஜெயிலர், லியோ படத்துக்கெல்லாம் முதல் நாள் மட்டுமின்றி முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகளே கிடைக்காமல் இருந்த நிலையில், இந்த தீபாவளிக்கு தியேட்டர் நிலைமை ரொம்பவே மோசமாக மாறியுள்ளது.

இன்று வெளியான 3 படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டும் கொஞ்சம் தப்பிக்கும் என்கின்றனர்.

 

Exit mobile version