Tamil News

இலங்கையில் உயிரிழந்தவர்களின் அஸ்தியில் நகைகள் செய்யும் தொழிற்சாலை

உயிரிழந்த உறவுகளின் அஸ்தி வைக்கப்பட்டு நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்று தொடர்பில் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தமது உறவினா்களின் அஸ்தியை அவர்கள் இறந்தபின் நிரந்தர நினைவுப் பரிசாக வைத்திருப்பது இலங்கையர்களுக்குப் பரிச்சயமில்லை.ஆனால் ஐரோப்பியர்கள் அஸ்தியை வைத்து நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களை அணிய விரும்புகிறார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த சந்தை வாய்ப்பை உணர்ந்த RKS நிறுவனம் இலங்கை முதலீட்டு சபையின் கீழ் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

கட்டுநாயக்கவில் விசித்திர தொழிற்சாலை; உயிரிழந்த உறவுகளின் அஸ்தியில் நகைகள்! | Cremation And Souvenirs At Katunayake

அஸ்தியை கொண்டு நகைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இதுவாகும்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் நினைவுப் பொருட்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனம், அதன் உற்பத்திக்கு நெனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ரோலண்ட் கார்ல் ஷோய்பர் தொிவித்துள்ளாா்.

Exit mobile version