Site icon Tamil News

ஜப்பானில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்க திட்டம்

ஜப்பானில் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் Shinkansen அதிவேக ரயில்கள் இயங்கும் என்று East Japan Railway நிறுவனம் தெரிவித்தது.

2028ஆம் ஆண்டு தானியக்க ரயில்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியது. ஆயினும் ஓட்டுநர்கள் ரயில்களில் இருப்பார்கள்.

2029இல் ஓட்டுநர்கள் இல்லாத அதிவேக ரயில்கள் பயணிகள் பயன்படுத்தாத ரயில் பாதையில் சோதிக்கப்படும். அந்த முயற்சி சுமுகமாக இருந்தால் 2030ஆம் ஆண்டுகளில் அவை பயணிகள்-ரயில் செல்லும் பாதையில் இயங்கத்தொடங்கும்.

ஜப்பானில் மக்கள்தொகை குறைந்துவருகிறது. இந்நிலையில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள் ஊழியர்கள் பணிபுரியும் விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் என்று ஈஸ்ட் ஜப்பான் ரயில்வே நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரயில்வே தொழில்நுட்பத்தைப் புதுப்பிப்பதன் மூலம் ஊழியர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணவும் நிறுவனம் கூறியுள்ளது.

Exit mobile version