Site icon Tamil News

அணு மின் நிலையத்தின் நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்க நீர் வியாழக்கிழமை கடலில் விடப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன.

இதையடுத்து, ஜப்பானில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அந்த விபத்துக்குப் பிறகு அணு உலைகளிலிருந்து கதிரியக்க நீா் வெளியேறியது. அதனை பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் தேக்கி வைத்தனா்.

தற்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதால், ஜப்பான் சென்று தண்ணீரை ஆய்வு செய்த ஐ.நா. கடலில் கலப்பது பாதுகாப்பானது என அணு பாதுகாப்பு அமைப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், புகுஷிமா அணு உலை நீரை கடலில் கலப்பதற்கு சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை ஜப்பானில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கதிரியக்க நீரை வியாழக்கிழமை கடலில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த நீர் கடலில் கலக்கும் பட்சத்தில் ஜப்பானிய கடல் உணவுகளை தடை செய்வதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசுகள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version