Site icon Tamil News

இராணுவ வீரர்கள் நீளமாக முடி வளர்க்க அனுமதி

இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும் நீண்ட கூந்தலை வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சீருடையில் இருக்கும் போது தோள்களில் கூந்தல் விழ முடியாது – மற்றும் ஹெல்மெட் அணிவதில் தலையிடாதவாறு இருக்க வேண்டும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வட கொரியா பற்றிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஜப்பான் வீரர்கள் பற்றாக்குறையுடன் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மேலும் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் உலகின் வயதான மக்கள் தொகை, குறைந்த ஊதியம் போன்ற காரணங்களால் ஜப்பான் இராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பச்சை குத்தியவர்களை JSDF இல் சேர அனுமதிக்கும் நடவடிக்கைகளையும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

டாட்டூக்கள் ஜப்பானில் நீண்ட காலமாக தடைசெய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version