Site icon Tamil News

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் பகுதியில் நேற்று மதியம் 2.03 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் தோடா மாவட்டங்களில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கில் இரவு 9.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்த 10 நிமிடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், லடாக்கின் லே பகுதியில் இன்று காலை 8.28 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது லேவிலிருந்து வடகிழக்கே 270 கி.மீ., 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டது.

இன்று அதிகாலை 2.16 மணியளவில் லடாக்கின் லே பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் மாலை 3.50 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Exit mobile version