Site icon Tamil News

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல்

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC ரத்னதிப ஹோட்டல் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்த பிரமாண்ட ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ITC ரத்னதிப ஹோட்டல் மற்றும் சுப்பர் ஹவுசிங் வளாகம் இந்நாட்டின் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடாது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரனதுங்க, கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஐடிசி தலைவர் ரத்னதீப சஞ்சீவ் பூரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

224 மீட்டர் மற்றும் 140 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு கட்டிடங்களை இணைத்து கட்டப்பட்ட இந்த கட்டிட வளாகம் தெற்காசியாவின் மிகப்பெரிய வான பாலத்தை கொண்டுள்ளது.

இந்தியாவின் ஷாக் கம்பெனியின் முதலீட்டில் 300 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த ஹோட்டல் வளாகம் கட்டப்பட்டது. கட்டிடத்தை ஒட்டிய 140 மீட்டர் உயரம் கொண்ட ஐடிசி ரத்னாதிபா ஹோட்டல் வளாகத்தில் 352 ஆடம்பர அறைகள் உள்ளன.

Exit mobile version