Site icon Tamil News

சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து வருவோருக்கு இடமளிக்கமுடியாமல் போராடும் இத்தாலி!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இத்தாலியின் தெற்குப் புறக்காவல் நிலையமான லம்பேடுசா தீவில், வார இறுதியில் 4,200க்கும் அதிகமான குடியேற்றவாசிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளுர் அதிகாரி, “நான் 1990 களில் இருந்து புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனைகளை கையாண்டு வருகிறேன். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னால்இப்படியான ஒரு நிலைமையை  கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நகரம் அவசரநிலையில் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்துடன்  ஒப்பிடும்போது, 53,000 பேர் சட்டவிரோதமாக கடல்வழி பயணங்களை மேற்கொண்டு இத்தாலிக்கு வருகை தந்துள்ளதாகவும், இதுவரை மொத்தமாக 107,500 இற்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version