Tamil News

வாரிசை தட்டி தூக்கி தளபதிக்கே தண்ணிகாட்டிய ‘மாவீரன்’ சிவகார்த்திகேயன்

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மாவீரன் திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரின்ஸ் படத்தின் மூலம் படுதோல்வியை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தரமான கம்பேக் திரைப்படமாக வந்திருக்கிறது மாவீரன்.

மடோன் அஸ்வின் இயக்கிய இப்படம் ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் சக்கைப் போடு போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இப்படம் முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இதில் தமிழக வசூல் மட்டும் ரூ.7.61 கோடி ஆகும்.

இந்த ஆண்டு வெளியான படங்களில் துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வனுக்கு அடுத்தபடியாக முதல் நாளில் அதிக கலெக்‌ஷன் அள்ளிய படம் என்கிற சாதனையை இதன்மூலம் நிகழ்த்தியது மாவீரன்.

இதையடுத்து இரண்டாம் நாளில் இருந்து பேமிலி ஆடியன்ஸின் வருகையால் இப்படத்தின் வசூலும் பிக் அப் ஆக ஆரம்பித்தது. அதன்படி இரண்டாம் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9.34 கோடி வசூலித்த இப்படம், மூன்றாம் நாளில் ரூ.10.57 கோடி வசூலித்து தமிழகத்தில் மட்டும் மூன்றே நாட்களில் ரூ.27.52 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.

 

Exit mobile version