Site icon Tamil News

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது பொருத்தமற்றது – சாகர காரியவசம்!

கொள்கை ரீதியில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நீதிபதிகள் விமர்சிப்பது நாட்டுக்கு பொருத்தமற்றது எனவும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை வரையறை செய்ய வேண்டும் எனவும், ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற (05)  விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள வழக்கு விசாரணைகள் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைவதற்கு ஒரு தடையாக உள்ளன.

வழக்கு விசாரணைகள் தாமதப்படும் போது பாதிக்கப்படும் தரப்பினர் ஒட்டுமொத்த அரச கட்டமைப்பையும் கடுமையாக விமர்சிப்பார்கள்.நடைமுறையில் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. பௌதீக மற்றும் மனித வளத்தை அடிப்படையாக கொண்டு காணப்படும் குறைப்பாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

நீதிமன்ற நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தினால் பல விடயங்களை துரிதமாக செயற்படுத்திக் கொள்ளலாம்.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் நடைமுறையில் செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆகவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களின் விடயதானங்கள் வரையறை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version