Site icon Tamil News

ஹமாஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டிற்கு பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.

யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட ஹிட்லரின் நாஜிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஹாமாஸ் தலைவர்கள் பலர் கத்தார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி இயங்கிவரும் நிலையில், அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸை முழுமையாக அழிக்கும்வரை போர் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version