Site icon Tamil News

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல – தையிப் எர்டோகன்!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நாஜிக்கள் யூத மக்களை நடத்துவதற்கு ஒப்பிட்டுப் பேசிய துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அடால்ஃப் ஹிட்லரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்று கூறினார்.

இஸ்ரேலுக்கான மேற்கத்திய ஆதரவு குறித்த தனது விமர்சனத்தை மீண்டும் கூறிய தையிப் எர்டோகன், இஸ்ரேலின் போருக்கு மத்தியில் காசாவில் மோதல்கள் குறித்த கருத்துக்களால் துன்புறுத்தலுக்கு உள்ளான கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை வரவேற்க துருக்கி தயாராக உள்ளது என்றார்.

போருக்குப் பிறகு காசாவின் ஆட்சி மற்றும் எதிர்காலம் பாலஸ்தீனியர்களால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்றும் வேறு யாராலும் அல்ல என்றும் தையிப் எர்டோகன் மீளவும் எடுத்துரைத்தார்.

“இஸ்ரேல் பயங்கரவாதிகளை – அது குடியேறிகளாக உலகிற்கு சந்தைப்படுத்துகிறது என்றுக் கூறிய அவர், பாலஸ்தீனியர்களுடன் அமைதியான எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்று சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version