Tamil News

அல்-ஜசீரா அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்திய இஸ்ரேல் பொலிஸார்

நாசரேத் ஊரில் உள்ள அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் இஸ்ரேல் பொலிஸார் இன்று (09) சோதனையில் ஈடுபட்டத்துடன் அல்-ஜசீராவுக்கு சொந்தமான கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

கத்தாரை மையமாக கொண்ட அல்-ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸரேல் அலுவலகங்களை மூடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

இஸ்ரேல், அல்-ஜசீரா சேனலின் ஒலிபரப்பையும் முடக்கியுள்ளது. ஞாயிற்றுகிழமை இஸ்ரேல் தொழில்நுட்பதுறை அமைச்சர் இதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். அதே நாளில் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஜசீரா அலுவலகத்தில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியது.

Al Jazeera: Israeli forces raid studio in Nazareth, minister says

காஸா போர் தொடர்புடைய நிகழ்வுகளை செய்தியாக்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அல்-ஜசீரா மீது குற்றம் சுமத்தினார்.இதனை மறுத்துள்ள அல்-ஜசீரா இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது எனவும் மனித உரிமைகள் மற்றும் தகவல்கள் பெறும் அடிப்படை உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்தது.

அல்-ஜசீரா தனது பணியாளர்கள் மற்றும் செய்தி நிறுவனத்தின் உரிமையை காக்க இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக இயன்ற நடவடிக்கையை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version