Site icon Tamil News

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் குண்டுவீச்சு சீர்குலைத்தது

 

காசா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு புதிய போர்நிறுத்தத்திற்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று கத்தார் பிரதமர் கூறுகிறார்.

தோஹா மன்றத்தில் பேசிய கத்தார் பிரதம மந்திரி முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, போர்நிறுத்தத்திற்கு இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை கத்தார் தொடரும் என்றார்.

பணயக்கைதிகளை விடுவிக்க அனுமதித்த ஒரு வார கால போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் வளைகுடா நாடு முக்கிய பங்கு வகித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.

இதனிடையே, போர் தீவிரமடைந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளதாகவும், இது ஹமாஸ் அமைப்பின் முடிவின் ஆரம்பம் எனவும் அவர் கூறுகிறார்.

காசா பகுதியில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை 18,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்காலிக போர்நிறுத்தம் அதன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளதாகவும், இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வரை பணயக்கைதிகளை விடுவிக்க மாட்டோம் என்றும் ஹமாஸின் ஆயுதப் பிரிவு அறிவித்துள்ளது.

Exit mobile version