Site icon Tamil News

ஈரானுக்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் – உறுதி செய்த அமெரிக்கா

ஈரானில் உள்ள நகரம் ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய நகரமான இஸ்பஹானில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பல அணுமின் நிலையங்கள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈரானிய நகரமான இஸ்பஹானில் உள்ள விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்திற்கு அருகில் பல வெடிப்புகள் கேட்டதை அடுத்து ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் இஸ்பஹானில் உள்ள அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாகவே உள்ளதென இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னர் ஈரானின் அரச ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Exit mobile version