Site icon Tamil News

ஐரோப்பாவில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” அதிகரித்து வருகிறது : மக்ரோன்!

ஐரோப்பாவில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” அதிகரித்து வருவதாகவும், அனைத்து மாநிலங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் தெரிவித்துள்ளார்.

அல்பேனியாவிற்கு இன்று (17.10) விஜயம் செய்த அவர், அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்படிக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நாங்கள் அதை நேற்று மீண்டும் பிரஸ்ஸல்ஸில் பார்த்தோம். அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படக்கூடியவை, உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மறுமலர்ச்சி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

“இங்கே, நாங்கள் எங்கள் பெல்ஜிய நண்பர்களுடன் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்துகிறோம் எனக் கூறிய அவர்,  காசாவின் எல்லை வேலியை தீவிரவாதிகள் உடைத்து 1,300 பேரைக் கொன்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  வரும் வாரங்களில்  இஸ்ரேலுக்குச் செல்லலாம் என்றும் மக்ரோன் கூறினார்.

Exit mobile version