Tamil News

முதுமைக்கு காரணம் மூளைதானா?

பொதுவாகவே  அணைவருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பெரும்பாளானவர்கள் ஏறக்குறைய 35 வயதைக் கடக்கும்போதே ஏதோ வயதானவர்கள் போல் நடந்துக்கொள்வர்.

இதற்கு காரணம் என்ன? நாம் பெரும்பாலும் அறிந்திராத விடயம் என்னவென்றால்,  முதுமைக்கு காரணமாக இருப்பது மூளைதான். மனிதனுக்கு 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறையத் தொடங்குகிறது என்கிறது மருத்துவ உலகம்.

சராசரியாக 1 கிலோ 394 கிராம் எடை கொண்ட மூளை, முதுமை வயதை அடையும்போது 1 கிலோ 161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்குப் போகும் ரத்தமும் குறைந்து விடுகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்,  காது,  சுவை உணர்வு,  வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம்,  உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் குறைகிறது.

மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை சக்தியை இழந்து விடுகின்றன.

இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள்  உள் மூளை நரம்பு அணுக்கள் சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்து விடுகின்றன. ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்ஜீமர்,  மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன.

இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு,  மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தைஉணராமல் கூட செயல்படுவார்கள்  என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே வயதாகுகிறது என்பது உடலளவில் ஏற்படும் மாற்றம் அல்ல. அது மனதளவில் ஏற்படுகிறது. எப்பொழுதும் புதிய விஷயங்களை செய்வதன் ஊடாக உங்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள முடியும்.

Exit mobile version