Site icon Tamil News

அல்பேனியாவில் மிகச் சிறிய குர்ஆன் கண்டுபிடிப்பு! பின்னணி தொடர்பில் வெளியான தகவல்

அல்பேனியாவில் மரியோ புருஷியின் (Mario Prushi) குடும்பத்தினர் உள்ளங்கையில் வைத்தால் பெரிதாக வெளியே தெரியாத சின்னஞ்சிறு திருக்குர்ஆனை தலைமுறை தலைமுறையாகப் பத்திரப்படுத்தி வருகின்றனர்.

உலகின் ஆகச் சிறிய குர்ஆன்களில் ஒன்றான அது வெள்ளிப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. 900 பக்கங்கள் கொண்ட அந்த குர்ஆன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என நம்பப்படுகிறது.

புருஷியின் கொள்ளுத் தாத்தாவும் பாட்டியும் கொசோவோவின் ஜாகொவிசா பகுதியில் வீடு கட்டுவதற்காகப் பூமியைத் தோண்டிக்கொண்டிருந்த போது பதப்படுத்தப்பட்ட ஓர் ஆடவரின் உடலை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்தச் சிறிய குர்ஆன் அவரின் மார்பில் இருந்தது. பிறகு அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர். மிகச்சிறிய குர்ஆனை வாங்குவதற்கு அருங்காட்சியகங்கள் மட்டுமல்ல பலரும் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

Exit mobile version