Site icon Tamil News

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான் : அதிகரிக்கும் போர் பதற்றம்!

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அல் கமேனி உத்தரவிட்டுள்ளார்.

இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை கடுமையாக விமர்சிக்கும் ஈரானிய ஆன்மீகத் தலைவரால் திடீரென கூட்டப்பட்ட ஈரானின் ஆன்மீக தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த உத்தரவை வழங்கியது.

இஸ்மாயில் ஹனிய்யாவின் கொலைக்கு நீதி வழங்குவது தனது பொறுப்பு என்பது ஆன்மீகத் தலைவரின் கருத்து.

இவ்வாறானதொரு பின்னணியில், தனது தலைவரின் கொலையானது மத்திய கிழக்கு யுத்த மோதல்களை வேறு திசைக்கு இட்டுச் செல்லும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹனியேவின் படுகொலைத் திட்டம் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறும் அமெரிக்கா, இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்று வலியுறுத்துகிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை என்றாலும், வெளிநாடுகளில் எதிரிகளை கொன்று குவித்த வரலாறு இஸ்ரேலுக்கு உள்ளது.

Exit mobile version