Site icon Tamil News

இஸ்ரேல் மீது நன்கு திட்டமிட்ட பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

இஸ்ரேல் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டதாக இருக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதனை தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானியுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபோது இந்தத் தகவலை அவரிடம் கூறியதாக அராக்சி தெரிவித்தார்.

ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த மாதம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனீயே ஜூலை 31-ஆம் திகதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்

இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும், அந்த நாடுதான் ஹனீயேவைக் கொன்றதாக உறுதியாக நம்பப்படுகிறது.

Exit mobile version