Site icon Tamil News

IPL – Play Off சுற்றுக்கு 2வது அணியாக ராஜஸ்தான் தகுதி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் லக்னோ அணி தோல்வியை தழுவியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

3 மற்றும் 4வது இடத்துக்கு சென்னை, ஐதராபாத், பெங்களூரு அணிகள் இடையே போட்டி நிலவும். டெல்லி மற்றும் லக்னோ அணி பிளே ஆப் சுற்று வருவது நடக்காத காரியமாக மாறிவிட்டது.

Exit mobile version