Site icon Tamil News

போராட்ட வன்முறை குறித்த விசாரணை ; ஐ.நா-வுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ஹசீனா

இட ஒதுக்கீட்டு சீர்திருத்தங்களை வலியுறுத்தி வங்கதேசத்தில் இந்த மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறுத்த விசாரணையில் ஐ.நா.வும் பிற சர்வதேச அமைப்புகளும் பங்கேற்ற வேண்டும் என்று அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்தது அவர் புதன்கிழமை(31) கூறியதாவது , போராட்ட வன்முறை குறித்த விசாரணை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேணெடும் என்று விரும்புகிறோம் , அதற்காக ஐ.நா மற்றம் பிற சர்வதேச அமைப்புகள் இந்த விசாரணையில் பங்கேற்றவேண்டும்

இந்த விவகாரத்தில் அரசு அலட்சியமாக நடந்துகொள்ளவில்லை என்பது எனக்கு தெரியிம் என்பதால் சர்வதேச அமைப்புகளுக்கு அமைப்பு விடுகிறேன் என்றார்.

1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக இந்த மாதத் தொடக்கத்திலிருந்து மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை எதிர்த்து இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவர் அமைப்பினரும் களமிறங்கினர்.

பின்னர் சர்ச்சைக்குறிய இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 5 சதவீதமாக குறைத்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 150 பேர் உயிரிழந்ததாக திங்கள் கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Exit mobile version